Aalaporaan Thamizhan

2 views

Lyrics

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
 உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
 சின்ன மகராசன் வரான்
 மீச முறுக்கு
 எங்க மண்ணு தங்க மண்ணு
 உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
 முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
 ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
 எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
 கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
 ♪
 ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
 வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
 வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
 வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
 சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
 நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
 இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட
 பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி
 வாராயோ வாராய் நீ
 அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
 வாராயோ வாராய் நீ
 வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
 தமிழன்டா எந்நாளும்
 சொன்னாலே திமிரேறும்
 காற்றோட கலந்தாலும்
 அதுதான் உன் அடையாளம்
 ♪
 Hey அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
 மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
 தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
 உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
 "நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும்" என்பானே
 பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
 கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 தமிழினமே...
 வீழாதே...
 தமிழினமே...
 ♪
 நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
 பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
 வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
 விழிச்சாலும் நெசந்தான்
 உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
 வருங்காலம் வாசனை சேர்க்கும்
 முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
 ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
 எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
 கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
 ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
 வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
 வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
 வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய அவன் தந்தானே
 வாராயோ வாராய் நீ
 அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
 வாராயோ வாராய் நீ
 வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
 தமிழாலே ஒண்ணானோம்
 மாறாது எந்நாளும்
 தமிழாலே ஒண்ணானோம்
 மாறாது எந்நாளும்
 

Audio Features

Song Details

Duration
05:48
Key
5
Tempo
136 BPM

Share

More Songs by A.R. Rahman

Albums by A.R. Rahman

Similar Songs