Veerapandi Kotayyile

1 views

Lyrics

வீரபாண்டி கோட்டையிலே
 மின்னலடிக்கும் வேளையிலே
 ஊரும் ஆறும் தூங்கும் போது
 பூவும் நிலவும் சாயும் போது
 கொலுசு சத்தம் மனச திருடியதே
 ♪
 வீரபாண்டி கோட்டையிலே
 மை இருட்டு வேளையிலே
 கொலுசு சத்தம் மனச திருடியதே
 வீரபாண்டி கோட்டையிலே
 மின்னலடிக்கும் வேளையிலே
 வளவிச் சத்தம் இதயம் திருடியதே
 வீரபாண்டி கோட்டையிலே
 வெள்ளி முளைக்கும் வேளையிலே
 பருவ பெண்ணை திருடி தழுவ
 திட்டம் இட்ட கள்வர்களே
 மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
 
 வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
 தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
 பவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு
 முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபசொல்லுக்கு
 உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு
 நீ ஏலம் போட வேராள்ள பாரு
 நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
 எம் பொழப்பு வாழும் புள்ள
 நீ போட்ட வெத்தலைக்கு
 என்ன நாக்கு ஊரும் புள்ள...
 ♪
 வீரபாண்டி கோட்டையிலே
 மை இருட்டு வேளையிலே
 கொலுசு சத்தம் மனச திருடியதே
 வீரபாண்டி கோட்டையிலே
 மின்னலடிக்கும் வேளையிலே
 வளவிச் சத்தம் இதயம் திருடியதே
 ♪
 ரெட்டை சூரியன் வருகுதம்மா
 ஒற்றை தாமரை கருகுதம்மா
 ♪
 வாள் முனையில் ஒரு சுயம்வரமா
 மங்கைக்குள் ஒரு பயம்வருமா
 ♪
 ஒரு தமயந்தி நானம்மா
 என் நடராஜன் யாரம்மா
 மணவாளன் இங்கே நானம்மா
 மகாராஜன் இங்கே நானம்மா
 இது மாலை மயக்கம்
 என் மனதில் நடுக்கம்
 நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
 நீ ரெண்டில் ஒண்ணு சொல்ல சொன்ன
 உன் புத்திய என்ன சொல்லும்
 நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
 எம் பொழப்பு வாழும் புள்ள
 நீ போட்ட வெத்தலைக்கு
 என்ன நாக்கு ஊரும் புள்ள
 ♪
 வீரபாண்டி கோட்டையிலே
 மை இருட்டு வேளையிலே
 கொலுசு சத்தம் மனச திருடியதே
 வீரபாண்டி கோட்டையிலே
 மின்னலடிக்கும் வேளையிலே
 வளவிச் சத்தம் இதயம் திருடியதே
 ♪
 நீ சொல்லும் சொல்லுக்குள்ளே
 எம் பொழப்பு வாழும் புள்ள
 நீ போட்ட வெத்தலைக்கு
 என்ன நாக்கு ஊரும் புள்ள
 ♪
 வீரபாண்டி கோட்டையிலே
 வெள்ளி முளைக்கும் வேளையிலே
 பருவ பெண்ணை திருடி தழுவ
 திட்டம் இட்ட கள்வர்களே
 மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
 வீரபாண்டி கோட்டையிலே
 மின்னலடிக்கும் வேளையிலே
 கடும் மலையும் தூங்கும் போது
 கொலுசு சத்தம் மனச திருடியதே
 

Audio Features

Song Details

Duration
06:29
Key
2
Tempo
127 BPM

Share

More Songs by A.R. Rahman'

Albums by A.R. Rahman'

Similar Songs