Veyilodu Vilaiyadi

1 views

Lyrics

ய்யாகி-யாகி-யாகி-யலாகி-யாகி-யாகி-யாகி
 யலாகி-யலாகி-யலாகி-ஏதே-து
 தையாரி-ஈ-ஈ-தையாரி
 ஹே-யாகி-யாகி-யாகி-யாரா-ஓரா-யாரா-ரோ
 ஹே-யாரா-ராரா-ரோ
 வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
 வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
 நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
 தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
 பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
 பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை
 புழுதி தான் நம்ம சட்டை
 வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
 வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
 ♪
 யே-ஏ-ஏ-ஓ-ஒ
 வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
 வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
 தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
 தண்டவாளம் மேல காசை வச்சு தொலைச்சோம்
 அஞ்சு பைசா film'ah வாங்கி அப்பாவோட வேட்டியிலே
 கண்ணாடி lens'ah வச்சு cinema காமிச்சோம்
 அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
 பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
 பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
 ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
 வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
 வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
 வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
 ♪
 (ஏஹே-ஹே-ஏஹே-ஏஹே)
 (ஏஹே-ஹே-ஏஹே-ஏஹே-ஹே-ஹே)
 (ஏஹே-ஹே-ஏஹே-ஏஹே)
 (ஏஹே-ஹே-ஏஹே-ஏஹே-ஹே-ஹே)
 ♪
 (ஏலே-லேலே-லேலே-லே)
 (ஏலே-லேலே-லேலே-லே)
 (ஏலே-லேலே-லேலே-லே)
 வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
 பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
 காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயும் ஆட்டுனோம்
 Record'u dance'u பார்க்க மீசை ஒட்டுனோம்
 ஊமத்தம் பூவ மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
 கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
 எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
 அப்ப நாங்க மின்னலுல photo புடிச்சோம்
 தொப்புள் கொடியப் போலத்தான்
 இந்த ஊரை உணர்ந்தோம்
 வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
 வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
 வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
 நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
 தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
 பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
 பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை
 புழுதி தான் நம்ம சட்டை
 (வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி)
 (வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே)
 வெயிலோடு விளையாடி வெயிலோட உறவாடி
 வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
 

Audio Features

Song Details

Duration
05:21
Tempo
100 BPM

Share

More Songs by G. V. Prakash

Albums by G. V. Prakash

Similar Songs