Kadhal Yenbathu (From "Oru Kalluriyin Kadhai")
2
views
Lyrics
காதல் என்பது கடவுள் அல்லவா அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா காதல் என்றால் பொய்கள் அல்லவா இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா இங்கு விழியன் வழிகளும் வரங்கள் அல்லவா வரங்கள் என்பது வலைகள் அல்லவா அதில் விழுந்து எழுவது துயரம் அல்லவா காதல் என்பது கடவுள் அல்லவா அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா காதல் என்றால் பொய்கள் அல்லவா இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா ♪ கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம் காலைநேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சொகந்தம் உன்னை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன் உந்தன் அருகில் வந்துதான் என் வேடந்தாங்களை உணர்ந்தேன் உனக்காகத்தானே உயிர் வாழ்வேன் நானே நி இன்றி நானே வெறும் கூடு தானே தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய் காதல் என்பது கடவுள் அல்லவா அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா காதல் என்றால் பொய்கள் அல்லவா இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா ♪ காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும் விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும் உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும் என்னை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கணக்கும் உன்னருகில் இருந்தால் என்னையே நீ வேண்டும் உலகம் கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும் தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய் காதல் வருவது புரிவதில்லையே அதை கடவுள் கூடத்தான் அறிவதில்லையே பூக்கள் பூப்பது தெரிவதில்லையே அதை யாரும் எங்குமே பாத்ததில்லையே காதல் வருவது புரிவதில்லையே அதை கடவுள் கூடத்தான் அறிவதில்லையே பூக்கள் பூப்பது தெரிவதில்லையே அதை யாரும் எங்குமே பாத்ததில்லையே
Audio Features
Song Details
- Duration
- 05:24
- Key
- 8
- Tempo
- 90 BPM