Singam Ondru (From 'Arunachalam')

3 views

Lyrics

சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 அதுக்கு நல்ல காலம் (பொறந்திருக்கு)
 நேரம் (கனிஞ்சிருக்கு)
 ஊரும் (தெளிஞ்சிருக்கு)
 உண்மை (புரிஞ்சிருக்கு)
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
 உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
 ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
 அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்
 சபதம் செய்து, சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 அதுக்கு நல்ல காலம் (பொறந்திருக்கு)
 நேரம் (கனிஞ்சிருக்கு)
 ஊரும் (தெளிஞ்சிருக்கு)
 உண்மை (புரிஞ்சிருக்கு)
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய்
 ♪
 பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் (முடிப்பான்)
 மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் (உழைப்பான்)
 சத்தியத்தின் பாதை வழி நடப்பான் (நடப்பான்)
 மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் (கொடுப்பான்)
 துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே
 ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம் தான் விடிகிறதே
 தீமை விலகிட நன்மை பெருகிட
 சட்டம் கிட்டும் திட்டம் கிட்டும்
 சிங்கம் ஒன்று (ஹேய்)
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 அதுக்கு நல்ல காலம் (பொறந்திருக்கு)
 நேரம் (கனிஞ்சிருக்கு)
 ஊரும் (தெளிஞ்சிருக்கு)
 உண்மை (புரிஞ்சிருக்கு)
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே, ஹேய்
 ♪
 பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் (இருப்பான்)
 வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் (எடுப்பான்)
 கெட்டவங்க முகமூடி கிழிப்பான் (கிழிப்பான்)
 நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் (மதிப்பான்)
 பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே
 சீறும் சிங்கம் இவனல்லோ சிறு புழுவாய் நீயும் எண்ணாதே
 தீமை விலகிட நன்மை பெருகிட
 சட்டம் கிட்டும் திட்டம் கிட்டும்
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 அதுக்கு நல்ல காலம் (பொறந்திருக்கு)
 நேரம் (கனிஞ்சிருக்கு)
 ஊரும் (தெளிஞ்சிருக்கு)
 உண்மை (புரிஞ்சிருக்கு)
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
 உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
 ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
 அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்
 சபதம் செய்து, சிங்கம் ஒன்று புறப்பட்டதே
 அதுக்கு நல்ல காலம் (பொறந்திருக்கு)
 நேரம் (கனிஞ்சிருக்கு)
 ஊரும் (தெளிஞ்சிருக்கு)
 உண்மை (புரிஞ்சிருக்கு)
 சிங்கம் ஒன்று புறப்பட்டதே-ஹா-ஹா
 

Audio Features

Song Details

Duration
04:45
Key
2
Tempo
142 BPM

Share

More Songs by Malaysia Vasudevan

Similar Songs