Saara Kaattrae

1 views

Lyrics

சார, சார காற்றே
 சார, சார காற்றே
 ♪
 சார, சார காற்றே
 பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
 சார, சார காற்றே
 அன்பை பொழிகிறதே ஆனந்த கீற்றே
 சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
 நனைகிறதே என் ஆயுள் ரேகையே
 படபடன்னு கைரெண்டும் சீராட்ட
 விழுகிறதே நம் தோளில் மாலையே
 பச்சை மனது பால் நிறம்
 அன்பில் சிவந்து போகுதே
 சற்றே இருண்ட வானிலை
 உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே
 தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே தானே தானா
 தானே தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே நானா நா
 ஹே ஏ, தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே தானே தானா
 தானே தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே நானா நா
 Oh, சார, சார காற்றே
 பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
 சார, சார காற்றே
 அன்பை பொழிகிறதே ஆனந்த கீற்றே, ஹே
 ♪
 யாழிசையும் ஏழிசையும் உன் குரலோ
 நீ நெருங்க பார்ப்பதுதான் சொர்க்கங்களோ
 தெய்வம் மறந்து கொடுத்திடாத வரம் எத்தனை கோடியோ
 அள்ளி கொடுக்க துணிந்த காதல் அதை சொல்வது நீதியோ
 சித்தம் உனையெண்ணி சடுகுடு விளையாடுதே
 புத்தம் புது வெட்கம் புகுந்திட நடை மாறுதே
 அந்தி பகலை மறந்து உறவு நீள
 அன்பே நீ வந்தாயே
 சார, சார காற்றே
 பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
 சார, சார காற்றே
 அன்பை பொழிகிறதே ஆனந்த கீற்றே
 சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற
 உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே
 குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட
 அடைமழையில் என் ஆசை மூழ்குதே
 லட்சம் பறவை போல
 என் உள்ளம் மிதந்து போகுதே
 சற்றே இருண்ட வானிலை
 உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே
 தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே தானே தானா
 தானே தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே நானா நா
 ஹே ஏ, தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே தானே தானா
 தானே தின்டக்கு தகின தின்டக்கு தகின தானே நானா நா
 Oh, சார, சார காற்றே
 

Audio Features

Song Details

Duration
04:07
Key
5
Tempo
112 BPM

Share

More Songs by Shreya Ghoshal

Albums by Shreya Ghoshal

Similar Songs