Unnale Unnale

3 views

Lyrics

யே உன்னாலே, உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே
 யே கண்ணாலே, கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல
 தேவதைய காணவில்ல ஏங்கினேன் அப்போ
 உன் வலியில் தீருதே ஏக்கமும் இப்போ
 பூமழையே வானமே தூறுமே அப்போ
 உன் நினைவு தூரலா சேருதே இப்போ
 யே உன்னாலே, உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே
 ♪
 இவன் மனசு தான் பெருசு தான்
 உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான்
 உன் நெனப்புதான் கனவு தான்
 அவன நெனச்சு தான் உருகுதான்
 Oh, அய்யோ அய்யோ தெரியுமா கனவிலே கலைகிற வேஷமே
 இங்கே சென்று முடியுமா தலும்பியே வழிகிற நேசமே
 என்ன நீயும் பாக்கலனா அன்னம் இல்ல ஆகாரம் இல்ல
 உன்ன பத்தி பேசலனா நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல
 நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் அப்போ
 நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் இப்போ
 மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் அப்போ
 காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் இப்போ
 உன்னாலே, உன்னாலே...
 ♪
 Oh, இல்லை இல்லை இதயமே தொலைந்திடும் தினம் உன்னை காணவே
 இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும் கடவுளை போலவே
 யே என்ன சொல்ல ஏது சொல்ல எல்லாமுமே நீயாகி நின்னேன்
 கத்தியில காயமில்ல ஆனாலும் நீ சொல்லாமல் கொல்லாமல் கொல்ல
 தேவதைய காணவில்ல ஏங்கினேன் அப்போ
 உன் வலியில் தீருதே ஏக்கமும் இப்போ
 பூமழையே வானமே தூறுமே அப்போ
 உன் நினைவு தூரலா சேருதே இப்போ
 நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் அப்போ
 நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் இப்போ
 மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் அப்போ
 காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் இப்போ
 உன்னாலே, உன்னாலே (சுத்துதடி பூமி பந்து தன்னாலே)
 Oh, கண்ணாலே, கண்ணாலே (ஒட்டுதடி வானவில்லு என்மேல)
 

Audio Features

Song Details

Duration
03:47
Key
10
Tempo
174 BPM

Share

More Songs by Thaman S

Albums by Thaman S

Similar Songs