Chinnan Sirisu (From "Kungumapoovum Konjumpuraavum")

1 views

Lyrics

தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...
 ♪
 தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...
 ♪
 சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட
 புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க
 பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு
 மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு
 விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு
 புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க
 சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட
 ♪
 சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
 கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா... ஓ ஓ ஓ
 சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
 சண்டியர் போல் வம்பு செய்தேனா... ஓ ஓ ஓ
 
 அரை டிராயர் போட்ட பையன் நீ
 பாடாத லாவனி
 விரல் சூப்பி நின்ன புள்ள நீ
 போட்டாச்சு தாவணி
 விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு
 வேறென்ன பூப்பு அடைந்த
 விவரம் தெரிஞ்சாச்சு
 குறும்பாதான் திரிஞ்ச பொண்ணு
 ஏன் குமரியாச்சு
 வேறென்ன உடம்பு உனக்கு
 வழங்க முடிவாச்சு
 ♪
 மண்ணாலதான் வீடு கட்டி
 நானும் நீயும் வாழுறப்போ
 மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ
 கமரக்கட்டு கடலை முட்டாய்
 வாங்கினாக்க வாயில் வச்சு
 காக்காக் கடி கடிச்சு திண்பாய் நீ
 ♪
 கருவாட்டைப் போல தீயில
 என் நெஞ்சை வாட்டுன
 அலங்கார அம்மன் கோவிலில்
 கண்ஜாடை காட்டின
 அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு
 வேறாரு ஆடி அசையும் அழகுமணித் தேரு
 அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு
 வேறாரு கூச்சம் நிறுத்த
 ஈச்சம் மரப்பூவு
 சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட
 புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க
 

Audio Features

Song Details

Duration
05:00
Key
8
Tempo
150 BPM

Share

More Songs by Yuvan Shankar Raja

Albums by Yuvan Shankar Raja

Similar Songs