Yaar Solli
1
views
Lyrics
யார் சொல்லி காதல் வருவது யார் சொல்லி காதல் போவது யாருக்கு அடிமை இந்த காதல் ஏன் இந்த காலம் நகருது ஏன் இந்த காதல் தகருது ஏன் இந்த மாறுபட்ட தேடல் இதயங்கள் இணையும் தருனோம் தெரிந்தால் சொல்வாய் இமை மூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய் பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய் பூமி தாண்ட வழியே இல்லை வா காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான் காதலின்றி கடவுள் இல்லை வா ஊ வே ஏ ஓ ஊ வா ஓ ஓ ஊ வா வு வா வோ ஊ வே ஏ ஓ ஊ வா ஓ ஓ ஊ வா வு வா வோ ♪ உன்னை நீ ஏன் மறைக்கிறாய் காரணங்கள் தெரியாமல் காதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும் என்னை நீ ஏன் வெருக்கிறாய் என் நிலை புரியாமல் காதல் உன்னை மெளனமாக அழுக வைக்கும் தேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே ஆடை போல கழற்றிப் போட முடியவில்லை உன்னை நான் உயிரை போல எனக்குள் உள்ளாய் வா என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான் காதலை தான் நம்புகின்றேன் நான் ♪ இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய் வாய்வழி நீ என்னைதான் வேண்டாம் என்று சொன்னாலும் உன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்றுவிடுமே நீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதலெனும் சிற்பத்தை சிறப்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை இது என்ன ஞாயம் நீ சொல்லடி இன்னும் நூறு தலை முறைகள் இந்த மண்ணில் வாழுமே அன்றும் இந்த காதல் இருக்கும் வா உயிர்கள் ஜனித்த நொடியில் இருந்து காதல் இனிதே வாழுதே காதல் இன்றி உயிர்கள் ஏது வா யார் சொல்லி காதல் வருவது யார் சொல்லி காதல் போவது யாருக்கு அடிமை இந்த காதல் ஏன் இந்த காலம் நகருது ஏன் இந்த காதல் தகருது ஏன் இந்த மாறுபட்ட தேடல் இதயங்கள் இணையும் தருணம் தெரிந்தால் சொல்வாய் இமை மூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய் பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய் பூமி தாண்ட வழியே இல்லை வா காதல் இங்கே தவறு என்றால் கடவுள் கூட தவறு தான் காதல் இன்றி கடவுள் இல்லை வா ஊ வே ஏ ஓ ஊ வா ஓ ஓ ஊ வா வு வா வோ ஊ லே லே ஊ லே லே லே லே ஓ ஓ ஓ ஓ ஹோ யய் யய் யே ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ யய் யய் யே
Audio Features
Song Details
- Duration
- 06:35
- Key
- 2
- Tempo
- 170 BPM