Koodamela Koodavechi

10 views

Lyrics

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
 உன்கூட கொஞ்சம் நானும் வரேன்
 கூட்டிகிட்டு போனா என்ன
 ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
 உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
 நீ வாயேன்னு சொன்னாலே
 வாழ்வேனே ஆதாரமா
 நீ வேணான்னு சொன்னாலே
 போவேண்டி சேதாரமா
 கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
 நீ கூட்டிகிட்டு போகசொன்னா
 என்ன சொல்லும் ஊரும் என்ன
 ஒத்துமையா நாமும் போக இது நேரமா
 தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
 நான் போறேன்னு சொல்லாம
 வாறேனே உன் தாரமா
 நீ தாயேன்னு கேட்காம
 தாரேனே தாராளமா
 ♪
 சாதத்துல கல்லுபோல
 நெஞ்சுக்குள்ள நீ இருந்து
 சலிக்காம சதி பண்ணுற
 சீயக்காய போல கண்ணில்
 சிக்கிகிட்ட போதும் கூட
 உறுத்தாம உயிர் கொல்லுற
 அதிகம் பேசமா அளந்து நான் பேசி
 எதுக்கு சடபின்னுர
 சல்லிவேர ஆணிவேராக்குற
 சட்டபூவ வாசமா மாத்துற
 நீ போகாத ஊருக்கு
 பொய்யான வழி சொல்லுற
 கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
 நீ கூட்டிகிட்டு போகசொன்னா
 என்ன சொல்லும் ஊரும் என்ன
 ♪
 எங்கவேணா போய்கோ நீ
 என்ன விட்டு போயிடாம
 இருந்தாலே அது போதுமே
 தண்ணியத்தான் விட்டுபுட்டு
 தாமரையும் போனதுன்னா
 தருமாற தலசாயுமே
 மறைஞ்சி போனாலும்
 மறந்து போகாத
 நெனப்புதான் சொந்தமே
 பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
 உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
 நீ பார்க்காம போனாலே
 கிடையாதே மறுசென்மமே
 கூடமேல கூடவச்சி கூடலூரு
 கூடலூரு போறவளே
 நீ கூட்டிகிட்டு போகசொன்னா
 என்ன சொல்லும் ஊரும் என்ன
 ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
 உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
 நான் போறேன்னு சொல்லாம
 வாறேனே உன் தாரமா
 நீ தாயேன்னு கேட்காம
 தாரேனே தாராளமா
 

Audio Features

Song Details

Duration
05:00
Key
4
Tempo
120 BPM

Share

More Songs by D. Imman

Albums by D. Imman

Similar Songs