Mazhi Peyyum
1
views
Lyrics
மழை பெய்யும் போதும் நனையாத யோகம் இது என்ன மாயம்? யார் செய்ததோ? நடக்கின்ற போதும் நகராத தூரம் இது என்ன கோலம்? யார் சொல்வதோ? இது மின்னலா? இல்லை தென்றலா? அறியாமலே அலைபாயுதே இது வண்ணமா? இல்லை வன்மமா? விளங்காமலே விளையாடுதே... மழை பெய்யும் போதும் நனையாத யோகம் இது என்ன மாயம்? யார் செய்ததோ? ♪ சில நேரம் மயிலிறகால் வருடிவிடும் புனிதமிது சில நேரம் ரகசியமாய் திருடிவிடும் கொடுமை இது மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும் பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும் பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே மழை பெய்யும் போதும் நனையாத யோகம் இது என்ன மாயம்? யார் செய்ததோ? ♪ தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது முடிவதில்லை... விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய் தெரிவதில்லை... கொல்லாமல் கொல்லும் இது உன் போல சைவம் சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம் குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே உடையுதே உயிரும் இன்று அது தான் காதலே மழை பெய்யும் போதும் நனையாத யோகம் இது என்ன மாயம்? யார் செய்ததோ? நடக்கின்ற போதும் நகராத தூரம் இது என்ன கோலம்? யார் சொல்வதோ? இது மின்னலா? இல்லை தென்றலா? அறியாமலே அலைபாயுதே இது வண்ணமா? இல்லை வன்மமா? விளங்காமலே விளையாடுதே...
Audio Features
Song Details
- Duration
- 05:40
- Key
- 2
- Tempo
- 140 BPM