Aathadi Aathadi
4
views
Lyrics
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசைப் பட்டு பூத்திருக்கா வா ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப் பகலா காத்திருக்க வா இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு வெவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகமிருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா ஆத்தாடி ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு பூத்திருக்கா வா ஒன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்க வா நீ மகுடத்தில் வைர கல்லு நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு உன்ன தொடவும் விரல் படவும் ஒரு பொருத்தம் எனக்கு ஏது நான் தரமான தங்கக்கட்டி நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி என்னை அடைக்க காத்து கெடக்க உன்ன போல ஆளு ஏது ஆசைகல் இருந்தா கூட மனம் மசியாது. ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு பூத்திருக்கா வா என் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப்பகலா காத்திருக்கா வா கடிகார முள்ளப் போல என்ன கணம் தோறும் சுத்தி வாயா என்ன தொரத்து தூள்பரத்து இந்த அல்லிப் பூ கிள்ளி போயா புளி மூட்ட தூக்கி பார்த்தேன் இப்ப பூ மூட்ட தூக்க போறேன் இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி என் அருணாக் கயிறு ஆக்க போறேன் இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தம் அய்யா விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பபட்டு பூத்திருக்கா வா உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி ராப் பகலா காத்திருக்க வா இது முதல் முதலாய் சிலு சிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு முழு வெவரம் எனக்கு சொல்வாயா என் அடி மனசில் சுகம் இருக்கு அடி வயிற்றில் பயம் இருக்கு அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா
Audio Features
Song Details
- Duration
- 05:52
- Key
- 7
- Tempo
- 135 BPM