Idhayathai Yedho Ondru

3 views

Lyrics

இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று
 இதுவரை இதுபோலே நானும் இல்லையே
 கடலலை போலே வந்து, கரைகளை அள்ளும் ஒன்று
 முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
 இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
 என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
 இது ஒரு கனவு நிலை
 கலைத்திட விரும்ப வில்லை
 கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே
 எனக்கென்ன வேண்டும் என்று
 ஒரு வார்த்தை கேளு நின்று
 இனி நீயும் நானும் ஒன்று
 என சொல்லும் நாளும் என்று
 எனக்கென்ன வேண்டும் என்று
 ஒரு வார்த்தை கேளு நின்று
 இனி நீயும் நானும் ஒன்று
 என சொல்லும் நாளும் என்று
 ♪
 மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
 மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்
 தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று
 நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்
 அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
 ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்
 ஒரு வெள்ளி கொலுசு போல, இந்த மனசு சிணுங்கும் கீழ
 அணியாத வைரம் போல, புது நாணம் மினுங்கும் மேல
 ஒரு வெள்ளி கொலுசு போல, இந்த மனசு சிணுங்கும் கீழ
 அணியாத வைரம் போல, புது நாணம் மினுங்கும் மேல
 இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று
 இதுவரை இதுபோலே நானும் இல்லையே
 கடலலை போலே வந்து, கரைகளை அள்ளும் ஒன்று
 முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
 இருப்பது ஒரு மனது, இதுவரை அது எனது
 எனைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
 இது ஒரு கனவு நிலை
 கலைத்திட விரும்ப வில்லை
 கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே
 ஒரு வெள்ளி கொலுசு போல, இந்த மனசு சிணுங்கும் கீழ
 அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல
 

Audio Features

Song Details

Duration
03:55
Key
4
Tempo
132 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs