Kaal Mulaitha Poovae (From "Maattrraan")

1 views

Lyrics

கால் முளைத்த பூவே
 என்னோடு balle ஆட வா வா
 Volga நதி போலே
 நில்லாமல் காதல் பாட வா வா
 Chamomile பூவின் வாசம் அதை
 உன் இதழ்களில் கண்டேனே
 Soviet ஓவியக் கவிதைகளை
 உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்
 அசையும் அசைவில் மனதை பிசைய
 இதய இடுக்கில் மழையை பொழிய
 உயிரை உரசி அனலை எழுப்ப
 எரியும் வெறியை தெறித்தாய்
 வால் முளைத்த காற்றே
 என்னோடு balle ஆட வா வா
 Volga நதி போலே
 நில்லாமல் காதல் பாட வா வா
 ♪
 நிலவுகள் தலைகள் குனிந்ததே
 மலர்களின் மமதை அழிந்ததே
 கடவுளின் கடமை முடிந்ததே
 அழகி நீ பிறந்த நொடியிலே
 தலைகள் குனிந்ததோ?
 மமதை அழிந்ததோ?
 கடமை முடிந்ததோ?
 பிறந்த நொடியிலே
 ஹே பெண்ணே
 ஹே பெண்ணே உன் வளைவுகளில்
 தொலைவதுபோலே உணருகிறேன்
 இடையினிலே திணறுகிறேன்
 கனவிதுதானா வினவுகிறேன்
 ♪
 கால் முளைத்த பூவே
 என்னோடு balle ஆட வா வா
 Volga நதி போலே
 நில்லாமல் காதல் பாட வா வா
 ♪
 இரவெலாம் நிலவு எரிகையில்
 திரிகளாய் விரல்கள் திரியுதே
 அருகிலே நெருங்கி வருகையில்
 இளகியே ஒழுக்கம் உருகுதே
 நிலவு எரிகையில்
 விரல்கள் திரியுதோ?
 நெருங்கி வருகையில்
 ஒழுக்கம் உருகுதோ?
 ஏனேனோ
 எனை ஏனோ உருக்குகிறாய்
 நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
 இடைவெளியை சுருக்குகிறாய்
 இரக்கமே இன்றி இறுக்குகிறாய்
 ♪
 கால் முளைத்த பூவே
 என்னோடு balle ஆட வா வா
 Volga நதி போலே
 நில்லாமல் காதல் பாட வா வா
 Chamomile பூவின் வாசம் அதை
 உன் இதழ்களில் கண்டேனே
 Soviet ஓவியக் கவிதைகளை
 உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்
 அசையும் அசைவில் மனதை பிசைய
 இதய இடுக்கில் மழையை பொழிய
 உயிரை உரசி அனலை எழுப்ப
 எரியும் வெறியை தெறித்தாய்
 அசையும் அசைவில் மனதை பிசைய
 இதய இடுக்கில் மழையை பொழிய
 உயிரை உரசி அனலை எழுப்ப
 எரியும் வெறியை தெறித்தாய்
 

Audio Features

Song Details

Duration
05:31
Key
2
Tempo
114 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs