Oh Maname
3
views
Lyrics
ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர்த்துளிகளை தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் கணுக்கள்தோறும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம் துளைகள் இன்றி நாயனமா? தோல்விகள் இன்றி பூரணமா? ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? ♪ இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் யார் ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே
Audio Features
Song Details
- Duration
- 04:55
- Key
- 9
- Tempo
- 109 BPM