Paartha Mudhal

5 views

Lyrics

பார்த்த முதல் நாளே
 உன்னை பார்த்த முதல் நாளே
 காட்சிப் பிழை போலே
 உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே
 ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
 கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
 என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
 காட்டிக் கொடுக்கிறதே
 கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
 காதல் வழிகிறதே
 கண்ணில் காதல் வழிகிறதே
 உன் விழியில் வழியும் பிரியங்களை
 பார்த்தே கடந்தேன் பகல் இரவை
 உன் அலாதி அன்பினில்
 நனைந்தபின் நனைந்தபின்
 நானும் மழையானேன்
 ♪
 காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
 தேடிப் பிடிப்பதுந்தன் முகமே
 தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பதுமுன் முகமே
 எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
 நீயறிந்து நடப்பதை வியப்பேன்
 உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்
 நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
 போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
 சரி என்று சரி என்று
 உனை போகச் சொல்லி
 கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
 கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
 காட்டிக் கொடுக்கிறதே
 கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
 காதல் வழிகிறதே
 கண்ணில் காதல் வழிகிறதே
 ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
 கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
 உன் அலாதி அன்பினில்
 நனைந்தபின் நனைந்தபின்
 நானும் மழையானேன்
 ♪
 உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
 தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
 கனவாக வந்ததென்று நினைத்தேன்
 யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
 சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
 நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
 கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
 கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
 சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
 சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
 பார்த்த முதல் நாளே
 உன்னை பார்த்த முதல் நாளே
 காட்சிப் பிழை போலே
 உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே
 ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
 கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
 என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
 

Audio Features

Song Details

Duration
06:08
Key
7
Tempo
108 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs