Thodu Vaanam
4
views
Lyrics
தொடு வானம் தொழுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய் தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உனை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீளத்தில் எனை புதைகிறேன் வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது உனை நீங்கியே உயிர் கரைகிறேன் வான் நீளத்தில் எனை புதைகிறேன் இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ இலை மேலே பனி துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம் காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே ♪ காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன் கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே சிறுபொழுது பிரிந்ததற்கே பலபொழுது கதறி விட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ
Audio Features
Song Details
- Duration
- 05:15
- Tempo
- 137 BPM