KadhalSiluvayil

3 views

Lyrics

காதல் சிலுவையில்
 அறைந்தாள் என்னை
 தீயின் குடுவையில்
 அடைத்தாள் கண்ணை
 காதல் சிலுவையில்
 அறைந்தாள் என்னை
 தீயின் குடுவையில்
 அடைத்தாள் கண்ணை
 கனவுகளில் விழுந்த என்னை
 கவலையிடம் அனுப்புகிறாள்
 இளமை என்னும் கருவறை எங்கும்
 எரிதழலை கொளுத்துகிறாள்
 உயிர் உதிரும் போது உறவுகளும் வீணோ
 உலகம் இதுதானோ
 கழுகுகளின் கண்களிலே
 மரண பயம் இல்லை
 ஊமைகளின் தாலாட்டை
 செவி உணர வாய்ப்பில்லை
 புழுதியிலே இரத்தினமாய்
 இருந்தது ஒரு தொல்லை
 பாவங்களை பாராமல்
 பழகியதனால் தொல்லை
 தேவை பூமியை தினமும் தேனாக்கும்
 கோபம் துயரங்களை சேர்க்கும்
 கனவுகளில் விழுந்த என்னை
 கவலையிடம் அனுப்புகிறாள்
 இளமை என்னும் கருவறை எங்கும்
 எரிதழலை கொளுத்துகிறாள்
 உயிர் உதிரும் போது
 உறவுகளும் வீணோ
 உலகம் இதுதானோ
 அவளுடைய கற்பனையை
 எழுத வழியில்லை
 கூண்டுக்கிளி நான் ஆனேன்
 வெளிவரவும் வாய்ப்பில்லை
 இவனுடைய உண்மைகளை
 உளர வழியில்லை
 தோல்விகளின் வீடானேன்
 துணை வரவும் ஆளில்லை
 வாழும் மானிடரின் சுமைகள் தீராது
 காலம் உறவுகளின் தீவு
 கனவுகளில் விழுந்த என்னை
 கவலையிடம் அனுப்புகிறாள்
 இளமை என்னும் கருவறை எங்கும்
 எரிதழலை கொளுத்துகிறாள்
 உயிர் உதிரும் போது
 உறவுகளும் வீணோ
 உலகம் இதுதானோ
 காதல் சிலுவையில்
 அறைந்தாள் என்னை
 தீயின் குடுவையில்
 அடைத்தாள் கண்ணை
 காதல் சிலுவையில்
 அறைந்தாள் என்னை
 தீயின் குடுவையில்
 அடைத்தாள் கண்ணை
 கனவுகளில் விழுந்த என்னை
 கவலையிடம் அனுப்புகிறாள்
 இளமை என்னும் கருவறை எங்கும்
 எரிதழலை கொளுத்துகிறாள்
 உயிர் உதிரும் போது
 உறவுகளும் வீணோ
 உலகம் இதுதானோ
 

Audio Features

Song Details

Duration
05:39
Key
11
Tempo
80 BPM

Share

More Songs by James Vasanthan

Albums by James Vasanthan

Similar Songs