Aande Nootrande

3 views

Lyrics

ஆண்டே நூற்றாண்டே உள் வானம் நூற்றாண்டே
 வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு
 ♪
 வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
 வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
 அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
 இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
 நிலவுக்கு போய் வரவே எங்கள் தேகத்துக்கு சிறகு கொடு
 ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு
 நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் கலைவாயா
 அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
 பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
 பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
 ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
 ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
 பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
 பசி இல்லா பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
 ஒரு பூகம்பம் எங்கும் நேராத அனல் பூமியை நீ கொண்டு வா
 ♪
 இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
 சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
 பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
 பரீட்சையின்றி கல்வியும் வேண்டும் பாடத்திட்டம் தருவாயா
 ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
 ஒரே நிழல் ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
 போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
 தமிழ் சாகாமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
 இசை கேக்காமல் கண் துகிலாத அட உலகம் நீ கொண்டு வா
 புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
 பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
 போர்க்களை உழுதுவிடு அங்கே பூச்செடி நட்டுவிடு
 அணுகுண்டு அத்தனையும் pacific கடலில் கொட்டிவிடு
 மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
 மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
 நிலவுக்கும் போய் வரவே எங்கள் தொண்டுக்கு சிறகு கொடு
 ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உனக்கென்று வலிமை கொடு
 Welcome come welcome come 21st century
 Welcome come welcome come 21st century
 Welcome come welcome come 21st century
 Welcome come welcome come 21st century
 

Audio Features

Song Details

Duration
07:17
Key
10
Tempo
166 BPM

Share

More Songs by Naveen

Similar Songs