Pazhaya Soru

Lyrics

பழைய சோறு பச்சை மிளகா
 பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
 திருட்டு மாங்கா தெரு சண்டை
 தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு
 ஆத்துக் குளியல் புடிச்ச சினிமா
 சரக்கு அடிச்ச போதை மயக்கம்
 ரயிலு பயணம் ராத்திாி காத்து
 ரம்மியமான இரகசிய நினைப்பு
 அட எல்லாம் ஒரு சுகம்தான்
 அடி காதல் தனி சுகம்தான்
 ஹே எல்லாம் ஒரு சுகம்தான்
 அடி காதல் தனி சுகம்தான்
 பழைய சோறு பச்சை மிளகா
 பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
 ♪
 உன் தோழி கூட scooty'யில
 நீ போகையில உன்ன ரசிச்சேனடி
 தோத்துப் போன பயல நீதான்
 அடி தேத்தயில அத ரசிச்சேனடி
 உன் நிழலையும் பாா்த்து பயந்து நீதான்
 ஓடையில உன்ன ரசிச்சேனடி
 முத முதலா நீ தாவணி போட்டு
 ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில
 என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி
 அட எல்லாம் ஒரு சுகம்தான்
 அடி காதல் தனி சுகம்தான்
 ஹே எல்லாம் ஒரு சுகம்தான்
 அடி காதல் தனி சுகம்தான்
 பழைய சோறு பச்சை மிளகா
 பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
 ♪
 ஏய் அரசலாத்து தண்ணியில
 மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி
 தேங்காய் சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு
 நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி
 ஹே ஊசி மழைய ஒவ்வொன்னாக
 நீ எண்ணயில அத ரசிச்சேனடி
 முத முறையா நீ என்கிட்டதான்
 வந்து பேசயில நான் கூசயில
 என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி
 அ... எல்லாம் ஒரு சுகம்தான்
 அட காதல் தனி சுகம்தான்
 ஹே எல்லாம் ஒரு சுகம்தான்
 அட காதல் தனி சுகம்தான்
 பழைய சோறு பச்சை மிளகா
 பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
 

Audio Features

Song Details

Duration
04:41
Key
7
Tempo
150 BPM

Share

More Songs by Sri

Similar Songs