Poovukkul
13
views
Lyrics
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் ♪ ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் ♪ பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவததிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
Audio Features
Song Details
- Duration
- 06:53
- Key
- 7
- Tempo
- 104 BPM
Share
More Songs by Unnikrishnan
Albums by Unnikrishnan
Similar Songs
Poovukkul
Unnikrishnan
Ennavale Adi Ennavale
Unnikrishnan
Innisai Paadivarum - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
Unnikrishnan
Podagantimayya
Unnikrishnan
Enakenna Yerkanavey
Unnikrishnan
Pazhaniyilae Sanyaasi - Language: Tamil; Genre: Murugan-Aarupadai Veedu
Unnikrishnan