Vaa Vaa En Devadhai
10
views
Lyrics
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார் உதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ♪ செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ♪ பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் தெய்வ மகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன் பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார் உதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா
Audio Features
Song Details
- Duration
- 04:49
- Key
- 11
- Tempo
- 113 BPM