Mallikaiye Mallikaiye (" From Ninaithen Vanthai" )
3
views
Lyrics
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு உள்ளம் கவர் கள்வனா குறும்புகளின் மன்னனா மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு ♪ கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ மறைக்காமல் அதைச் சொல்லம்மா பக்கம் வந்தானா முத்தம் தந்தானா காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே சரிதான் இது காதலின் அறிகுறிதான் தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு ♪ மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி புது வெட்கம் கூடாதடி காதல் பேசும் பூங்கிலி உந்தன் ஆளைச் சொல்லடி நீ மட்டும் நழுவாதடி அவன் முகம் பார்த்தால் அதே பசி போக்கும் அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும் உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன் சொல்லு உன் காதலன் யார் அம்மா மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு உள்ளம் கவர் கள்வனா குறும்புகளின் மன்னனா மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
Audio Features
Song Details
- Duration
- 04:53
- Key
- 4
- Tempo
- 88 BPM