May Madham ("From Shajahaan" )
3
views
Lyrics
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட ♪ புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே சில நேரம் வேலும் வெல்லலாம் பல நேரம் பூவும் வெல்லலாம் அதுதானே காதல் யுத்தம் அன்பே வென்றாலும் இனிமை கான்பதும் தோற்றாலும் பெருமை கான்பதும் இங்கேதான் காணக்கூடும் அன்பே ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல ♪ பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா போ போ போ என்னும் சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே அகராதி இங்கு மாறும் அன்பே ஆடைக்குள் மூடி நிற்கிறாய் அது கூட வேறு அர்த்தமா ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
Audio Features
Song Details
- Duration
- 05:14
- Key
- 9
- Tempo
- 94 BPM