Dhaagam Theera
5
views
Lyrics
தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரேனை மனம் தேடுதே தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் நாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி ♪ உயிர் தொடும் பனியே ஊசியிலை காடுகளில் வீசி வரும் காற்றும் சுடுகிறதே ஓ இது என்ன கனவோ துணை இழந்த ஒரு பறவை துடி துடித்து அழுதே சோகத்திலே ஓ ஹோ ஒன்றின் உயிர் போகும் இல்லை ரெண்டும் வாழும் இறைவன் அவன் விதியை விதியை யாருசொல்ல கூடும் தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே ♪ சிறகுகள் கொடுத்தே சிறைபிடிக்கும் காதலிலே சிலுவைகளை இதயம் சுமக்கிறதே ஓ ஓ வலிகளை கொடுத்தே வருடி விடும் வாழ்க்கையிலே உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ காதல் கொண்டு வாழும் காந்தள் மலர் நாளும் அடை மழையில் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும் தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே கண்கள் ஈரத்தை காணும் நேரத்தில் விழி வழி உயிர் போகுதே அந்தி நேரத்தில் அன்பின் ஏக்கத்தில் உயிரேனை மனம் தேடுதே வா சகி வா சகி வா சகி வா சகி வானம் போல் நாளெல்லாம் வாழலாம் வா சகி வா சகி வா சகி வா சகி வா சகி காதலை நெஞ்சிலே ஏந்திடும் வா சகி
Audio Features
Song Details
- Duration
- 04:33
- Tempo
- 120 BPM