Iravingu Theevai

3 views

Lyrics

இரவிங்கு தீவாய் நமை சூழுதே
 விடியலும் இருளாய் வருதே
 நினைவுகள் தீயாய் அலை மோதுதே
 உடலிங்கு சாவாய் எழுதே
 பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்
 உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்
 மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
 வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
 கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
 இரவிங்கு தீவாய் நமை சூழுதே
 விடியலும் இருளாய் வருதே
 ♪
 இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
 அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
 ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
 அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
 நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா
 வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே
 வரவா... வரவா...
 தினம் தினம் உயிர்த்தெழும்
 மனம் அன்றாடம் மாயுமே
 உயிர் வரை நிறைந்துனை
 மனம் கொண்டாடி வாழுமே
 மரங்கள் சாய்ந்து கூடு
 விழுந்தும் குயில்கள் ராகம் பாடுமே
 இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
 நிலவு பொறுமை காக்குமே
 மழை வழி கடல் விடும்
 வின்காதல் மண்ணை சேருமே
 உனை உடல் பிரிந்தினும்
 என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
 நீ போய் வா வா வா...
 

Audio Features

Song Details

Duration
03:41
Key
4
Tempo
80 BPM

Share

More Songs by Govind Vasantha

Similar Songs