The Life of Ram

3 views

Lyrics

கரை வந்த பிறகே
 பிடிக்குது கடலை
 நரை வந்த பிறகே
 புரியுது உலகை
 நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
 இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
 இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
 நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
 வாழா என் வாழ்வை வாழவே
 தாளாமல் மேலே போகிறேன்
 தீர உள் ஊற்றை தீண்டவே
 இன்றே இங்கே மீள்கிறேன்
 இங்கே இன்றே ஆள்கிறேன்
 ♪
 ஹே... யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
 ஏதும் இல்லாமலே
 இயல்பாய்
 சுடர் போல் தெளிவாய்
 நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
 கண்ணாடியாய்
 பிறந்தே
 காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
 இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
 வாழ்க்கை போதும் அடடா
 எதிர் காணும் யாவுமே
 தீண்ட தூண்டும் அழகா
 நானே நானாய் இருப்பேன்
 நாளில் பூராய் வசிப்பேன்
 போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்
 வாகாய் வாகாய் வாழ்கிறேன்
 பாகாய் பாகாய் ஆகிறேன்
 ♪
 தோ... காற்றோடு வல்லூரு தான் போகுதே
 பாதை இல்லாமலே அழகாய்
 நிகழே அதுவாய்
 நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
 ஓசை எல்லாம் துறந்தே
 காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்
 திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்
 பூமி மீது இருப்பேன்
 புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்
 ஏதோ ஏகம் எழுதே
 ஆஹா ஆழம் தருதே
 தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
 ஆரோ ஆரிராரிரோ
 ஆரோ ஆரிராரிரோ
 கரை வந்த பிறகே
 பிடிக்குது கடலை
 நரை வந்த பிறகே
 புரியுது உலகை
 நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
 இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
 இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
 நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
 தானே தானே னானே னே
 தானே தானே னானே னே
 தானே தானே னானே னே
 தானே தானே னானே னே
 தானே தானே னானே னே
 தானே தானே னானே னே
 தானே தானே னானே னே
 தானே
 

Audio Features

Song Details

Duration
05:54
Key
1
Tempo
84 BPM

Share

More Songs by Govind Vasantha

Similar Songs