Tamizhi - From "Tamizhi"

5 views

Lyrics

எம்மதமும் சம்மதமாகும்
 தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும்
 இந்த உலகாகும், எங்கள் உறவாகும்
 தமிழி... வழியே, உயிரே, உறவே தமிழே
 எம்மதமும் சம்மதமாகும்
 தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும்
 இந்த உலகாகும், எங்கள் உறவாகும்
 தமிழி... வழியே, உயிரே, உறவே தமிழே
 மொழியால் இணைவாய்
 மொழிதான் துணையே
 என் தமிழ் இனமே மொழிதான் பலமே
 தமிழால்தான் நீயும் தமிழனே
 மொழிதான் உறவே
 மொழிதான் தொடர்பே
 என் தமிழ் இனமே மொழிதான் பலமே
 தமிழால்தான் நீயும் தமிழனே
 தமிழால்தான் யாரும் தமிழனே
 தமிழ் அறிந்தால்தான் நாம் தமிழரே
 என் தமிழ் இனமே மொழிதான் பலமே
 என் தமிழ் இனமே மொழிதான் பலமே
 எம்மதமும் சம்மதமாகும்
 தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும்
 இந்த உலகாகும், எங்கள் உறவாகும்
 தமிழி... மொழியே, உயிரே, உறவே தமிழே
 எம்மதமும் சம்மதமாகும்
 தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும்
 இந்த உலகாகும், எங்கள் உறவாகும்
 தமிழி... மொழியே, உயிரே, உறவே தமிழே
 தமிழே...
 தமிழே...
 எங்கள் உடல் பொருள் ஆவியும் நீ தமிழி
 எங்கள் அறிவுக்குள் எரிகின்ற தீ தமிழி, தமிழி
 தமிழ் அழிந்தால் இனம் அழியும்
 தமிழ் அறிவால் மொழி பகிர்வாய்
 பல பிரிவாய் ஏன் பிரிந்தாய்
 இனி தமிழால் ஒன்றிணைவாய்
 இனம் வேறு, மதம் வேறு
 குலம் வேறு என பிரிந்திடும் வரலாறு
 இருந்தாலும் ஒரு போதும்
 பகை உணர்வினை செம்மொழி வளர்க்காது
 மனிதனாய் இருந்தால் ஒரு வேளை
 தமிழனாய் இருப்பாய்(தமிழனாய் இருப்பாய்)
 நீ தமிழனாய் இருந்தால் நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்(மனிதனாய் இறப்பாய்)
 மனிதனாய் இருந்தால் ஒரு வேளை தமிழனாய் இருப்பாய்
 நீ தமிழனாய் இருந்தால் நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்
 Digital யுகத்துக்கு வந்தடைந்த செந்தமிழே
 வணக்கம் உலகத்துக்காக உழைக்கும்
 உலக தமிழர் அனைவருக்கும்
 தமிழ்தானே நம்மை இணைக்கும்
 அன்பாலே நம்மை பிணைக்கும்
 பிற மொழிகளுக்கே துவக்கம்
 தமிழ்தானே தமிழரின் விளக்கம்
 வணக்கம் ஊரே யாவரும் கேளீர்
 தமிழ் அறிந்தால் ஒரு மனிதராய் வாழ்வீர்
 ஒரு தலைமுறைக்கும் தமிழ் கற்று தருவீர்
 தமிழே நம் அடையாளம் அறிவீர்
 உலகில் உள்ள மொழிகள் தோன்றும்
 முன்னே தோன்றிய என் மொழி செம்மொழி
 எங்கள் உயிர் அது மண்ணில் மறைந்தாலும்
 என்றென்றும் வாழிய வாழிய நீ
 கொத்து கொத்தாய் தமிழரை
 ஒன்று குவித்தாலும், அழித்தாலும்
 தமிழ் மொழி வாழும் வரை
 தமிழர்க் அழிவில்லை மீண்டும் தோன்றும்
 போற்றி பாதுக்காத்திடு நம் மொழியை
 உலகிற்கே பரப்பு செம்மொழியை
 கீழடி காலடி மறைந்தாலும்
 செந்தமிழர் சருகாய் சரிந்தாலும்
 தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
 தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
 தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
 தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
 தமிழே...
 மனிதனாய் இருந்தால் ஒரு வேலை தமிழனாய் இருப்பாய்
 நீ தமிழனாய் இருந்தால்
 நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய் தமிழே என் தமிழே(என் தமிழே)
 

Audio Features

Song Details

Duration
04:54
Key
3
Tempo
140 BPM

Share

More Songs by Hiphop Tamizha

Albums by Hiphop Tamizha

Similar Songs