Kathe Kathe
3
views
Lyrics
ஏலே திக்கு வாயா என்னடா மொ-மொ-மொ மொக்க? மயில்சாமி மயிக்கிறதுக்கு ஆரமிச்டானா வாங்கடா போலாம் மாட்ட விட்டிட்டு போரது வீட்டுக்கு தெரிஞ்சதுனா முட்டைகோஸ் பிஞ்சு போயிரும்டோய் அப்டினா எங்க மாட்டயும் சேத்து பாத்துகிட்டு இரு நாங்க போயிட்டு வரோம்-டியோ காத்தே காத்தே, ஏன் காதோடு சொல் காத்தே காத்தே, ஏன் காதோடு சொல் உசுருக்குள்ள போனா, மூச்சா ஓடுவதோ? உடலுக்குள்ள போனா, எசையா மாறுவதோ? ஏனோ? அது ஏனோ? அத யாரோ அறிவார்? தெக்கில் இருந்து வந்தாக்கா தென்றல் என்னும் காத்தாகும் வடக்கில் இருந்து வந்தாக்கா வாட்டும் வாடக் காத்தாகும் மேல் காத்து, கீழ் காத்து சொலட்டி அடிக்கும் சூரக் காத்து புரட்டி எடுக்கும் புயல் காத்து காத்து காத்து காத்து காத்து காத்து காத்தே காத்தே, ஏன் காதோடு சொல் காத்தே காத்தே, ஏன் காதோடு சொல் ♪ காட்டு மூங்கில் கூட்டம் வானம் பார்த்தது என்ன வண்டுக் கூட்டம் வந்து அதில் ஓட்டப் போட்டது என்ன துளையோட விளையாட காத்தும் வரலாச்சு அவையாட விளையாட்டு அதுதான் எசையாச்சு இது எனக்கு புரிஞ்சாச்சு அட விசயம் தெரிஞ்சவன் நம்மாளு இது ஊர்க்கு புரியாது அட விட்டுதள்ளுடா நாய் வாலு நாய் வாலு நாய் வாலு நாய் வாலு ♪ தன்ன தனியா நானு, அது போல் இந்தக் காடு எனக்கு தொனையா காடு, அதுக்கு தொனையா நானு காட்டுக்கும் தேனாடும் இங்கு பலக் கூடு நானும் ஓர் காட்டுக்கும் இதுதான் ஏன் கூடு தருவேனே தேன் பாட்டு அட தாளம் போட்டு நீ தலையாட்டு விலகாது நம் கூத்து வந்து சேர்ந்துப் பாடுவோம் உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடு காத்தே காத்தே, ஏன் காதோடு சொல் உசுருக்குள்ள போனா, மூச்சா ஓடுவதோ? உடலுக்குள்ள போனா, எசையா மாறுவதோ? ஏனோ? அது ஏனோ? அத யாரோ அறிவார்? தெக்கில் இருந்து வந்தாக்கா தென்றல் என்னும் காத்தாகும் வடக்கில் இருந்து வந்தாக்கா வாட்டும் வாடக் காத்தாகும் மேல் காத்து, கீழ் காத்து சொலட்டி அடிக்கும் சூரக் காத்து புரட்டி எடுக்கும் புயல் காத்து காத்து காத்து காத்து காத்து காத்து காத்தே காத்தே, ஏன் காதோடு சொல் காத்தே காத்தே, ஏன் காதோடு சொல்
Audio Features
Song Details
- Duration
- 06:15
- Key
- 6
- Tempo
- 172 BPM