Nethukuddtha Vartha

3 views

Lyrics

நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 வாக்கு குடுத்தா போட்டு உடைக்கும்
 பொம்பள சங்கதி கேட்டயா?
 வாக்கு குடுத்தா போட்டு உடைக்கும்
 பொம்பள சங்கதி கேட்டயா?
 சத்தியமெல்லாம், இப்போ சாத்தியம் இல்ல
 பொத்தி வழத்தா, அது பத்திரம் இல்ல
 நிக்கல நிக்கல காலு
 இதில் நிச்சயம் ஏதும் இல்ல
 பத்திரம் பத்திரம் மனசு
 அது பாத்திரம் பண்டம் இல்ல
 நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 வாக்கு குடுத்தா போட்டு உடைக்கும்
 பொம்பள சங்கதி கேட்டயா?
 கன்னி மாரே (கன்னி மாரே கன்னி மாரே...)
 நான் பொலம்புறது கேக்குதா (நான் பொலம்புறது கேக்குதா...)
 ♪
 வெண்மேகம் கரு கருத்து, மை போல மாறுது
 மண் மேல மழப் பொழுஞ்சு தண்டாரம் இறக்குது
 வெளித்திட துணி அடிக்க, கல்தானே தாங்குது
 அலசிட துணி அடிக்க, தண்ணீரும் ஆங்குது
 ஏத்தி வச்ச, பாரமெல்லாம்
 ஏத்தி வச்ச பாரமெல்லாம், தூக்கிச் சொமப்பது யாரு?
 கை கொடுத்து இறக்கி வைக்க, காத்திருப்பது யாரு?
 கணக்குதம்மா, மனம் கணக்குதம்மா
 எனக்கென்னவோ கிறுக்கு வர என்னத்த சொல்வதம்மா?
 நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 வாக்கு குடுத்தா போட்டு உடைக்கும்
 பொம்பள சங்கதி கேட்டயா?
 ♪
 என் நெஞ்சம் வாசலுக்கு, இப்ப எதுவும் கதவில்ல
 யாராரோ வந்துப் போனா நானும் அத மூடவில்ல
 உள்ள நீ நொழஞ்சப்போ, மூடிவச்சேன் உள்ளுக்குள்ள
 என்னவிட்டு போனதப்போ, பாடிவிட்டேன் வெளியில
 கதவடச்ச கனகமடி
 கதவடச்ச கனகமடி, கன்னி மனசக் கேளு
 மனசுக்குள்ள நெசமிருக்கா, மறஞ்சதென்னடிக் கூறு
 மழ வருமா?, கண்ணில் அழ வருமா?
 வெதைக்குள்ள ஒரு விதியிருக்கு
 வெட்டி வேர் ஆகிடுமா?
 நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 வாக்கு குடுத்தா போட்டு உடைக்கும்
 பொம்பள சங்கதி கேட்டயா?
 சத்தியமெல்லாம், இப்போ சாத்தியம் இல்ல
 பொத்தி வழத்தா, அது பத்திரம் இல்ல
 நிக்கல நிக்கல காலு
 இதில் நிச்சயம் ஏதும் இல்ல
 பத்திரம் பத்திரம் மனசு
 அது பாத்திரம் பண்டம் இல்ல
 நேத்து குடுத்த வார்த்த ஒன்னு
 காத்துல போகுது பாத்தியா?
 வாக்கு குடுத்தா போட்டு உடைக்கும்
 பொம்பள சங்கதி கேட்டயா?
 

Audio Features

Song Details

Duration
05:12
Key
3
Tempo
128 BPM

Share

More Songs by Karthik Raja

Similar Songs