Poovukkul Olindhirukkum - Jeans
6
views
Lyrics
ஒரு வாசமில்லா கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவை பார் பூவாசம் அதிசயமே அலைகடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ள தென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ள தென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்-ஹோ-ஹோ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம் வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்-ஹோ-ஓ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஒரு வாசமில்லா கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவை பார் பூவாசம் அதிசயமே அலைகடல் தந்த மேகத்தில் சிறு துளி கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ள தென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ள தென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்-ஹோ-ஹோ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம் வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்-ஹோ-ஓ பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்
Audio Features
Song Details
- Duration
- 02:10
- Key
- 7
- Tempo
- 90 BPM