Pen Megam Pola, Pt. 1
3
views
Lyrics
பெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் குளிர்ந்திட முத்தம் தந்தாய் மழையென நானும் வீழ்ந்தேன் நுரைத்திடும் கடலாய் மீண்டும் அலைந்துனை தேடி வந்தேன் இசையாலே காதல் ஜிவியாகும் சைந்தவியே பெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் ♪ விடியும் முன்னே உன்னை நிலவாய் நான் ரசிப்பேனே கனியும் முன்னே என்னை பறித்தால் நான் சிலிர்ப்பேனே அடி என்னை இயக்கிடும் சுவாச காற்று நீயடி என் கண்கள் பேசிடும் கதைகள் ஓராயிரம் அதை சொன்னால் வெல்வேனே வெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் ♪ அழகில் என்னை வென்றாய் அடடா நீ தேவதையா அன்பில் என்னை கொன்றாய் ஐயோ நீ ராட்சசியா மலர் கொள்ளை போலவே மனதை கொண்டு செல்கிறாய் அதை கண்டு கொள்கையில் கம்பி நீ எண்ணுவாய் விடுதலையே வேண்டாமே பெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன் குளிர்ந்திட முத்தம் தந்தாய் மழையென நானும் வீழ்ந்தேன் நுரைத்திடும் கடலாய் மீண்டும் அலைந்துனை தேடி வந்தேன் இசையாலே காதல் ஜிவியாகும் சைந்தவியே பெண் மேகம் போலவே நீ என்மேல் ஊர்கிறாய் உன் மோக பார்வையால் நான் நீராய் ஆகிறேன்
Audio Features
Song Details
- Duration
- 04:39
- Tempo
- 142 BPM