Azhage Bhramanidam

3 views

Lyrics

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
 நீ என் மனைவியாக வேண்டும் என்று
 ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
 ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
 என் ஆசை நிறைவேறுமா
 என்தோழி நீயும் சொல்லம்மா
 நடக்கும் நடக்கும்
 நான் கூட சொல்கிறேன்
 அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
 நீ என் மனைவியாக வேண்டும் என்று
 ♪
 உன்னை நான் சுமப்பதினால்
 இதயமும் கருவறை தான்
 மனதால் நானும் அன்னையே
 மறவேன் என்றும் உன்னையே
 நான் பாலைவனத்தில் விதை போல்
 நீ பருவம் தந்த மழை போல்
 என் காதல் செடியில் பூவும் பூத்ததே
 உன் விழி திறந்திருந்தால்
 விடியலே தேவை இல்லை
 உன்னை நான் துறந்திருந்தால்
 உயிர் அது சொந்தம் இல்லை
 இத்தனையும்
 இனி கிடைக்குமா
 கிடைக்கும்
 கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
 அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
 நீ என் மனைவியாக வேண்டும் என்று
 ♪
 ஏன் இந்த பிறவி என்று
 இது வரை நினைத்திருந்தேன்
 உயிரே உன்னை பார்த்ததும்
 உலகே புதியதானதே
 என்னை படைத்த அந்த தெய்வம்
 என்னை சுமந்த அன்னை தெய்வம்
 இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்
 பருவங்கள் ஓடி போகும்
 உருவங்கள் மாறி போகும்
 உன் மீது கொண்ட காதல்
 உயிரையும் தாண்டி வாழும்
 சொன்னதெல்லாம்
 இனி நடக்குமா
 நடக்கும் நடக்கும்
 நான் கூட சொல்கிறேன்
 அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
 நீ என் மனைவியாக வேண்டும் என்று
 ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
 ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
 என் ஆசை நிறைவேறுமா
 என்தோழி நீயும் சொல்லம்மா
 நடக்கும் நடக்கும்
 நான் கூட சொல்கிறேன்
 

Audio Features

Song Details

Duration
04:30
Tempo
150 BPM

Share

More Songs by Deva

Similar Songs