Chanakya Chanakya
3
views
Lyrics
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் I love you டா காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுப்பாய் I love you டா தீராத உன் அன்பினால் போராடி என்னை வென்றதால் என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன் சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் ♪ உன்னை நானும் நினைப்பதை யாரும் தடுக்கின்ற வேளை துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம் செய்கின்றதே உயிர் வலிகின்றதே நீ தந்த ஒற்றை கடிதம் ஆயிரம் முறை நான் படிப்பேனே உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுதிடுவேனே தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில் உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன் ♪ சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் சத்யா சொல்லுடி எதுக்கு இப்படி பார்க்குற நல்ல இருக்கியே வெட்கமா இருக்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கு கிட்ட வராத வருவேன் வேண்டாம் எனக்கு வேணும் Please சத்யா ♪ ஜன்னலின் வழியே வெண்ணிலவு ஒளியை கசிக்கின்ற நேரம் கட்டிலின் மேலே கவிதைகள் போல நாம் வாழலாம் இனி நாம் வாழலாம் என் மீது காலை போட்டு தூங்கும் உன்னை ரசிப்பேனே நான் உந்தன் காதை கடித்து தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே இது போலவே பல ஆசைகளே உள்நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் I love you டா காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுத்தாய் I love you டா தீராத உன் அன்பினால் போராடி என்னை வென்றதால் என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்... ♪ சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் சத்யா உன் மதியால் என்(please) மனதை நீதான் வசியம் செய்தாய் சீ...
Audio Features
Song Details
- Duration
- 05:23
- Key
- 6
- Tempo
- 95 BPM