Kaalai Adhikaalai
3
views
Lyrics
காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான் காலை அதிகாலை மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான் மூச்சுக்காற்று தூய்மையாக மேனி எங்கும் நீர் பூக்க கோடை ஒன்றை போலவே ஓடுகின்ற நான் அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே ♪ உந்தன் பெருமைகளை இங்கு யாரும் அறியவில்லை விழி மூடிக் கனவொன்று இந்த ஊரும் கிடைக்கிறதே நீண்ட இரவுகளை உந்தன் பார்வை கரைந்திடுமே எனக்கென்று நீ தினம் தோன்ற இந்த உள்ளம் துடிக்கிறதே வைர வைகரை எனக்கெனதானே இந்த தாமரை மலர் துணை துளிர்த்திட தினம் தினம் எனக்கென ஒலித்திடுதே ♪ காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான் காலை அதிகாலை (காலை அதிகாலை) மென் பூக்கள் விழி மேலே வெள்ளையாகும் பூமியில் பிள்ளையாக நான் நெஞ்சம் கொஞ்சம் வேகமாக ரத்தம் மொத்தம் சுத்தமாக இன்று எந்தன் வானிலே மின்னுகின்ற நான் அதிகாலையே அதிகாலையே முதல் காதல் நீதானே அதிகாலையே அதிகாலையே தினம் தினம் உனை மணந்திட புதிதென பிறந்திடவே ♪ காலை அதிகாலை...
Audio Features
Song Details
- Duration
- 04:47
- Key
- 4
- Tempo
- 152 BPM