Kanjadai

3 views

Lyrics

கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
 செவத்த புள்ளை ஓ
 கால் ரெண்டும் தரையில் இருக்கு
 ஆனா சொரனை இல்லை
 கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
 செவத்த புள்ளை ஓ
 கால் ரெண்டும் தரையில் இருக்கு
 ஆனா சொரனை இல்லை
 கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே
 சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே
 என் பேரை நீ சொல்ல ஏதோ ஆகி போனேனே
 சொல் ஏதும் இல்லாம சேர்ந்தேன் தானே
 வாய்க்கால் நான் உன்னால் வைகை போல ஆனேனே
 குத்தீட்டி சிரிப்புல
 கொத்தோட வனப்புல
 கொன்னாலே துடி துடி துடி துடிக்க
 கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
 செவத்த புள்ளை ஓ
 கால் ரெண்டும் தரையில் இருக்கு
 ஆனா சொரனை இல்லை
 ♪
 தாயோட வாசம்
 அறிஞ்சேனே உனக்குள்ள
 தன்னால நான் என்னை
 தரப்போறேன் புள்ள
 பாதாது கேசம்
 உனைச்சேர தடையில்லை
 பஞ்சாங்கம் நீ பார்த்து
 தொட வேணும் மெல்ல
 சிங்கார சீமையே
 அண்ணாந்து பாத்திட
 மங்காத காதல் பூவை
 மாலையாக்கி நான் போட
 கூட கூட அப்ப வாட
 பூத்து போவேன் நீயும் சூட
 கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
 செவத்த புள்ளை ஓ
 கால் ரெண்டும் தரையில் இருக்கு
 ஆனா சொரனை இல்லை
 ♪
 நீ பார்த்த பார்வை
 ஒரு நாளும் நரைக்காது
 நரை வந்து சேர்ந்தாலும்
 அழகை குறைக்காது
 நீ பேசும் பேச்சு
 ஒரு போதும் நடிக்காது
 வயசாகி போனாலும்
 பழசை மறக்காது
 பாக்காத பார்வையும்
 கேட்காம கேட்டிட
 காயாத ஈரம் போல
 காதல் தூறும் நெஞ்சோட
 ஆசை கூட அன்பு கூட
 வாழ்ந்து போவும் கூட மாட
 கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
 செவத்த புள்ளை ஓ
 கால் ரெண்டும் தரையில் இருக்கு
 ஆனா சொரனை இல்லை
 கண்ஜாடை காட்டி என்னை
 கவுத்த கலரு பையா ஓ
 கலவாணி பயலே உனக்கு
 காரணம் விளங்கலையா
 கரும்பாறை உனை பார்த்து விளைஞ்சேனே
 சவுக்காரம் என நானும் கரைஞ்சேனே
 என் பேரை நீ சொல்ல ஏதோ ஆகி போனேனே
 சொல் ஏதும் இல்லாம சேர்ந்தேன் தானே
 வாய்க்கால் நான் உன்னால் வைகை போல ஆனேனே
 குத்தீட்டி சிரிப்புல
 கொத்தோட வனப்புல
 கொன்னாலே துடி துடி துடி துடிக்க
 

Audio Features

Song Details

Duration
04:53
Key
9
Tempo
174 BPM

Share

More Songs by Gopi Sundar

Similar Songs