Nibuna Nibuna

3 views

Lyrics

நிபுணா நிபுணா என் நிபுணா
 மனம் படித்திடும் புது நிபுணா
 மதனா மதனா மன்மதனா
 என்னை மடக்கிய மந்திரனா
 உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
 நீயும் எனக்கெனெ பிறந்ததை உணர்ந்தேன்
 நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
 என்னை உனக்கெனெ கொடுத்திட துணிந்தேன்
 நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்
 நிபுணா நிபுணா என் நிபுணா
 மனம் படித்திடும் புது நிபுணா
 மதனா மதனா மன்மதனா
 என்னை மடக்கிய மந்திரனா
 ♪
 ஒரு பார்வை பார்கின்றாய்
 உயிர் சுண்டி இழுக்கின்றாய்
 உனை என்னில் விதைக்கின்றாய்
 சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்
 நெருப்பாக கொதிக்கின்றாய்
 மறு நொடியே குளிர்கின்றாய்
 உறக்கத்தை கெடுக்கின்றாய்
 மனதில் நுழைந்து குதிக்கின்றாய்
 உடைகள் இன்றி இருப்பதனால்
 நிலவை நீ அணுகின்றாய்
 நிலவாய் என்னை நினைப்பதனால்
 உடைகள் உனக்கு எதற்கென்றாய்
 அடடா நீதான் அலைகின்றாய்
 எதையோ நினைத்து சிரிக்கின்றாய்
 முழு தரிசனம் காண பறக்கின்றாய்
 நிபுணா நிபுணா என் நிபுணா
 மனம் படித்திடும் புது நிபுணா
 மதனா மதனா மன்மதனா
 என்னை மடக்கிய மந்திரனா
 ♪
 எதிர்பாரா நேரத்திலே எதிர்கொண்டு அணைத்தாயே
 எதிர்பார்க்கும் சமயத்திலே தவிக்க வைத்து ரசித்தாயே
 புதிர் போடும் கண்களிலே
 என் மனதை கலைத்தாயே
 அதிசயங்கள் காட்டிடவே
 வில்லாய் எனையே வலைத்தாயே
 வாசல் புள்ளி கோலங்களில்
 பின்னல்கள் போல் தானே
 இனிமேல் நாம் இருவருமே
 பின்னி பினைந்து கிடப்போமே
 விரலால் இடை மேல் நடந்தாயே
 வேகதடைகள் கடந்தாயே
 என் அழகை முழுதாய் அளந்தாயே
 நிபுணா நிபுணா என் நிபுணா
 மனம் படித்திடும் புது நிபுணா
 மதனா மதனா மன்மதனா
 என்னை மடக்கிய மந்திரனா
 உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்
 நீயும் எனக்கெனெ பிறந்ததை உணர்ந்தேன்
 நீ பல முறை தொடர்வதை அறிந்தேன்
 என்னை உனக்கெனெ கொடுத்திட துணிந்தேன்
 நீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்
 நிபுணா? நிபுணா?
 

Audio Features

Song Details

Duration
05:38
Key
1
Tempo
135 BPM

Share

More Songs by Srikanth Deva

Similar Songs