Elangathu - solo

2 views

Lyrics

இளங்காத்து வீசுதே
 இசை போல பேசுதே
 இளங்காத்து வீசுதே
 இசை போல பேசுதே
 வளையாத மூங்கிலில்
 ராகம் வளைஞ்சு ஓடுதே
 மேகம் முழிச்சு கேட்குதே
 கரும் பாறை மனசுல
 மயில் தோகை விரிக்குதே
 மழை சாரல் தெளிக்குதே
 புல் வெளி பாதை விரிக்குதே
 வானவில் குடையும் புடிக்குதே
 புல் வெளி பாதை விரிக்குதே
 வானவில் குடையும் புடிக்குதே
 மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
 புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
 இளங்காத்து வீசுதே
 இசை போல பேசுதே
 வளையாத மூங்கிலில்
 ராகம் வளைஞ்சு ஓடுதே
 மேகம் முழிச்சு கேட்குதே
 ♪
 பின்னி பின்னி சின்ன இழையோடும்
 நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
 ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு
 உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு
 அள்ளி அள்ளி தந்து உறவாடும்
 அன்னைமடி இந்த நெலம் போல
 சிலருக்கு தான் மனசு இருக்கு
 உலகம் அதில் நிலைச்சு இருக்கு
 நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்லை
 யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை
 உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
 குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல
 இளங்காத்து வீசுதே
 இசை போல பேசுதே
 வளையாத மூங்கிலில்
 ராகம் வளைஞ்சு ஓடுதே
 மேகம் முழிச்சு கேட்குதே
 ♪
 மனசுல என்ன ஆகாயம்
 தினம் தினம் அது புதிர் போடும்
 ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா
 வெத விதைக்கிற கை தானே
 மலர் பறிக்குது தினம் தோரும்
 மலர் தொடுக்க நாரை எடுத்து
 யார் தொடுத்த மாலையாச்சு
 ஆழம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
 மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
 தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
 மலை நதி போலே
 கரும் பாறை மனசுல
 மயில் தோகை விரிக்குதே
 மழை சாரல் தெளிக்குதே
 புல் வெளி பாதை விரிக்குதே
 வானவில் குடையும் புடிக்குதே
 புல் வெளி பாதை விரிக்குதே
 வானவில் குடையும் புடிக்குதே
 மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
 புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே
 

Audio Features

Song Details

Duration
06:09
Tempo
144 BPM

Share

More Songs by Sriram Parthasarathy

Similar Songs