Thamirabarani Rani
3
views
Lyrics
என் தாமிரபரணி ராணி செந்தாமரை மேனி நான் தாலி கட்ட காத்து கிடக்கேன் வா வா அட வல்ல நாட்டு மலையே என் வாலிப துரையே நான் தாலி கட்ட சம்மதம் சொன்னேன் வா வா ஓ ஜோசியத்த பார்த்தாச்சு ஜாதகமும் சேர்ந்தாச்சு பத்திரிகை அடிச்சாச்சு பந்த கால் நட்டாச்சு அச்சதையும் போட்டாச்சு அப்புறம் என்னாச்சு ஏ தாமிரபரணி ராணி செந்தாமரை மேனி நான் தாலி கட்ட காத்து கிடக்கேன் வா வா ♪ மணக்க மணக்க அயிர மீன வாங்கி ருசி ருசியாக சமைப்பேன் நான் தேனையும் ஊத்தி வருப்பேன் தானே உனக்கின்னு காத்து கெடப்பேன் கம்ப கூழ நீயும் கரைச்சி தந்தா அது தான் சக்கர பொங்கல் உன் கன்னத்தில் தேச்சு வென் பளிங்காச்சு கதவோரத்து செங்கல் குழம்புக்கு நான் அரைச்ச மஞ்சள் செவக்கயிலே உன் நெனப்பு கூட்டான்சோறு ஆக்கையிலே பானையில் பொங்கும் உன் சிரிப்பு ஏ பாலூத்தி செஞ்சானா பனி ஊத்தி செஞ்சானா உன் உதடு ஒவ்வொன்னா தேன் ஊத்தி செஞ்சானா ஓ உதிரத்து உரியாக உள் மனம் ஆடுதய்யா ஏ தாமிர பரணி ராணி செந்தாமரை மேனி நான் தாலி கட்ட காத்து கிடக்கேன் வா வா ♪ ஹா ஹா ஹா ஹா ஆஆ ♪ ஹே கடலை காட்டில் நடந்து போகும் போது தொலைஞ்சது வெள்ளி கொலுசு உன் கை விரல் கோத்து நடக்கும் போது காணாம போச்சு மனசு நூறு ஏக்கர் மல்லி தோட்டம் போட்டேன் வாசனை என்ன வாசம் உன் ஏழரை இஞ்சு இடுப்பின் வாசம் ஆளையும் தூக்கி வீசும் நீ கடிச்ச வேப்பம் குச்சி நட்டு வச்சா துளிர்க்குதய்யா உன் பாதத்தை நெனச்ச ஓட தண்ணி பதநீராக இனிக்குதையா ஏ மயிலிறகு கண்ணால மனசுக்குள்ள கீறுறியே கேழ் வரகு கூழாக என் உசுர கிண்டுறாயே ஏ என் ரவிக்கையில போட்ட கொக்கி பட்டுனு தெறிக்குதய்யா ஏ தாமிர பரணி ராணி செந்தாமரை மேனி நான் தாலி கட்ட காத்து கிடக்கேன் வா வா அட வல்ல நாட்டு மலையே என் வாலிப துரையே நான் தாலி கட்ட சம்மதம் சொன்னேன் வா வா ஓ ஜோசியத்த பார்த்தாச்சு ஜாதகமும் சேர்ந்தாச்சு பத்திரிகை அடிச்சாச்சு பந்த கால் நட்டாச்சு அச்சதையும் போட்டாச்சு அப்புறம் என்னாச்சு
Audio Features
Song Details
- Duration
- 04:42
- Key
- 1
- Tempo
- 93 BPM