Thaalatum Mounam Ondril (From "Kuruthi Aattam")
3
views
Lyrics
தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன் எங்கேயோ என்னை கூட்டி செல்லும் பாதை நீ தானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீ தானே பாராமல் உன்னை பார்த்ததை நீ உணர்வாய் ஆனாலும் அதை மூடிவைத்து ஏங்க வைத்தாய் தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே உனை பார்க்கும் நாளில் மட்டும் வாழ்கின்றேனே எங்கேயோ என்னை கூட்டி செல்லும் பாதை நீ தானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீ தானே ♪ ம்ம்-அன்பே உனை நான் காண்கிறேன் வேறென்ன வேறென்ன வேண்டும் இனி ஓசை எல்லாம் போனால் என்ன மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி எப்போதோ நீ தந்த பார்வைகள் இப்போதும் வாழ்கின்றதே தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய் என் காதல் நீள்கின்றதே அன்பே கனிவாய் மலரும் உன் வார்த்தை இறகாய் எனையே தேற்றும் அடடா அடடா என் நாட்கள் இன்னொரு பிறவி கேட்கும் எங்கேயோ என்னை கூட்டி செல்லும் பாதை நீ தானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீ தானே ம்-ம்-ம்
Audio Features
Song Details
- Duration
- 03:29
- Key
- 8
- Tempo
- 150 BPM